ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல்: கிரிக்கெட் வீரர்கள் மூவர் உட்பட 8 பேர் உயிரிழப்பு

ஆப்​கானிஸ்​தானில் பாகிஸ்​தான் ராணுவம் நேற்று முன்​தினம் நடத்​திய வான்​வழி தாக்​குதலில் ஆப்​கானிஸ்​தான் கிரிக்​கெட் வீரர்​கள் 3 பேர் உட்பட 8 பேர் உயி​ரிழந்​தனர்.

Oct 19, 2025 - 04:50
 0  11
ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல்: கிரிக்கெட் வீரர்கள் மூவர் உட்பட 8 பேர் உயிரிழப்பு

காபூல்: ஆப்​கானிஸ்​தானில் பாகிஸ்​தான் ராணுவம் நேற்று முன்​தினம் நடத்​திய வான்​வழி தாக்​குதலில் ஆப்​கானிஸ்​தான் கிரிக்​கெட் வீரர்​கள் 3 பேர் உட்பட 8 பேர் உயி​ரிழந்​தனர்.

ஆப்​கானிஸ்​தானில் பாகிஸ்​தான் எல்​லையை ஒட்டி பாக்​டிகா மாகாணம் அமைந்​துள்​ளது. இந்த மாகாணத்​தின் உர்​குன் மற்​றும் பார்​மல் மாவட்​டங்​களில் பாகிஸ்​தான் ராணுவம் நேற்று முன்​தினம் மாலை​யில் வான்​வழி தாக்​குதல் நடத்​தி​யது. மக்​கள் குடி​யிருப்பு பகு​தி​கள் மீது இந்த தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக ஆப்​கன் ஊடகங்​கள் தெரிவிக்​கின்​றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow