ட்ரம்ப் வெற்றிக்கு உதவிய துளசி கப்பார்ட்
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீண்டும் அதிபர் ஆகவுள்ளார்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீண்டும் அதிபர் ஆகவுள்ளார். இவர் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உதவிய குழுவில் அரசியல் பிரபலம் துளசி கப்பார்ட், தொழிலதிபர்கள் விவேக் ராமசாமி,எலான் மஸ்க், ராபர்ட் எப். கென்னடி ஜூனியர், ஜே.டி.வான்ஸ் எனபலர் இடம் பிடித்தனர். அவர்களில் முக்கியமானவர் துளசி கப்பார்ட்.
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் 4 முறை எம்.பி.யாகதேர்வு செய்யப்பட்டவர் துளசி கப்பார்ட். அமெரிக்காவின் முதல்இந்து எம்.பி. ஆனால், இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அல்ல. இவர் கடந்த 1981-ம் ஆண்டுஅமெரிக்காவில் பிறந்தார். இவரின் தாய் கரோல் கப்பார்ட் இந்துவாக மதம் மாறினார். அதனால் அவர் தனது ஐந்து குழந்தைகளுக்கும் இந்து பெயர்களை வைத்தார். நான்காவதாக பிறந்த மகளுக்கு துளசி என்ற சம்ஸ்கிருத பெயரை வைத்தார்.
What's Your Reaction?