ஆபரேஷன் சிந்தூர்: ராணுவத்துக்கு உத்வேகமூட்டும் ரஜினிகாந்த் பதிவு

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை மூலம் தாக்குதல் நடத்தியது இந்தியா. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இது குறித்து சமூக வலைதளத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

May 7, 2025 - 12:05
 0  14
ஆபரேஷன் சிந்தூர்: ராணுவத்துக்கு உத்வேகமூட்டும் ரஜினிகாந்த் பதிவு

சென்னை: பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ராணுவ நடவடிக்கை மூலம் தாக்குதல் நடத்தியது இந்தியா. இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “போராளியின் சண்டை தொடங்கியது. பணி நிறைவேறும் வரை இனி ஓய்வில்லை. ஒட்டுமொத்த தேசமும் உங்களுடன் உள்ளது. ஜெய்ஹிந்த்” என குறிப்பிட்டுள்ளார். இதில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சகத்தை அவர் டேக் செய்துள்ளார். இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பலர் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow