ஆண்டுக்கு ரூ.95 கோடி சம்பளம் வாங்கும் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் சிஇஓ
அதிக சம்பளம் வாங்கும் இந்திய ஐடி துறை சிஇஓ-க்களின் பட்டியலில் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் சி.விஜயகுமார் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 2024-25 நிதியாண்டில் விஜயகுமாருக்கு ரூ.94.6 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: அதிக சம்பளம் வாங்கும் இந்திய ஐடி துறை சிஇஓ-க்களின் பட்டியலில் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் சி.விஜயகுமார் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 2024-25 நிதியாண்டில் விஜயகுமாருக்கு ரூ.94.6 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
இதில், அடிப்படை சம்பளம் ரூ.15.8 கோடி, செயல்திறன் சார்ந்த போனஸ் ரூ.13.9 கோடி உள்ளிட்டவையும் அடக்கம். இவரையடுத்து இன்போசிஸ் சிஇஓ சலில் பரேக்கின் சம்பளம் 22 சதவீதம் அதிகரித்து ரூ.80.6 கோடியாகவும், விப்ரோ சிஇஓ நிவாச பலியா ரூ.53.6 கோடியும் சம்பளமாக பெற்றுள்ளனர்.
What's Your Reaction?