தங்கம் விலை புதிய உச்சம்: நகை வியா​பாரி​கள் சொல்வது என்ன?

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்​திய ரூபா​யின் மதிப்பு உள்​ளிட்​டவை காரணமாக தங்​கம் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. கடந்த ஜனவரி தொடக்​கத்​தில் ஒரு பவுன் ரூ.58 ஆயிர​மாக இருந்தது. 

Aug 8, 2025 - 06:25
 0  6
தங்கம் விலை புதிய உச்சம்: நகை வியா​பாரி​கள் சொல்வது என்ன?

சென்னை: சென்​னை​யில் ஆபரணத்​ தங்​கத்​தின் விலை வரலாறு காணாத புதிய உச்​சத்தை எட்​டி​யுள்​ளது. பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.75,200-க்கு விற்​பனையானது. சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு உள்​ளிட்​டவை காரண​மாக தங்​கம் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. கடந்த ஜனவரி தொடக்​கத்​தில் ஒரு பவுன் ரூ.58 ஆயிர​மாக இருந்தது.

பின்​னர், போர் பதற்​றம் உள்பட பல காரணங்​களால், தங்​கம் விலை தொடர்ச்​சி​யாக உயர்ந்து ஜூலை 23-ம் தேதி ஒரு பவுன் தங்​கம் ரூ.75,040 என்ற உச்​சத்தை அடைந்​தது. பின்​னர், ஏற்ற இறக்​க​மாக இருந்த நிலை​யில், நேற்று புதிய உச்​சத்தை பதிவு செய்​தது. பவுனுக்கு ரூ.160 உயர்ந்​து, ரூ.75,200-க்கு விற்​பனையானது. ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.9.400-க்கு விற்​கப்​பட்​டது. ஆக.2 முதல் 7-ம் தேதி வரை பவுனுக்கு ரூ.2 ஆயிரம் வரை உயர்ந்​துள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow