ஆடி கிருத்திகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

ஆடி கிருத்திகை யை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத் தணி முருகன் கோயிலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்து வரு கின்றனர்

Jul 20, 2025 - 19:20
 0  3
ஆடி கிருத்திகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

திருவள்ளூர்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் திருத்தணியில் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. காவடி மண்டபத்தில் உற்சவர் முருகன் சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow