அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விமானப் பயண கனவை சொந்த செலவில் நிறைவேற்றிய தலைமை ஆசிரியர்!

தூத்துக்குடி அருகே பண்டாரம்பட்டி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விமான கனவை தலைமை ஆசிரியர் நிறைவேற்றினார்.

Mar 22, 2025 - 19:40
 0  4
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விமானப் பயண கனவை சொந்த செலவில் நிறைவேற்றிய தலைமை ஆசிரியர்!

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பண்டாரம்பட்டி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விமானப் பயணக் கனவை தலைமை ஆசிரியர் நிறைவேற்றினார்.

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் நெல்சன் பொன்ராஜ். இவர் தூத்துக்குடி அருகே பண்டாரம்பட்டி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது சொந்த செலவில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 மாணவர்களை அழைத்துக்கொண்டு சென்னை செல்ல திட்டமிட்டார். அவர்களுடன் முன்னாள் மாணவர்கள் 7 பேரும், 2 பெற்றோர்களும் இணைந்து கொண்டனர். இவர்கள் கடந்த இன்று (மார்ச் 22) காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow