தமிழகத்தில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக ‘தொடர் கண்காணிப்பு’ ஏன் அவசியம்?
“பாலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்துவது என்பது ஒரே இரவில் நடந்துவிடாது. சமூகப் பொறுப்போடு பலரும் கைகோத்து செயல்படுத்த வேண்டும்.”

பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அதிமுக அறிவித்துள்ளது. இன்னொருபுறம் தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், அவற்றை கட்டுப்படுத்துவது குறித்து காவல் துறை மற்றும் இதர துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
பாலியல் தொந்தரவு புகார்களை மாணவர்கள் தைரியத்துடன் முன்வந்து 14417 என்ற உதவி மையத்தின் தெரிவிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பாலியல் தொல்லை சம்பவம் தொடர்பான புகாரில் உண்மைத்தன்மை நிரூபணம் செய்யப்பட்டால் அதுசார்ந்த ஆசிரியர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார்.
What's Your Reaction?