அம்பகரத்தூர் பத்ர காளியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
‘அம்பரன்’ என்ற அசுரனை அஷ்டபுஜ பத்ர காளியம்மன் அழித்து அகிலத்தை காத்ததால், இவ்வூருக்கு ‘அம்பரகரம்’ என்று பெயர் வந்தது. பின்னர் ‘அம்பகரம்’ என்றாகி, தற்போது ‘அம்பகரத்தூர்’ என்று அழைக்கப்படுகிறது.

காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரில் அமைந்துள்ள பத்ர காளியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ‘அம்பரன்’ என்ற அசுரனை அஷ்டபுஜ பத்ர காளியம்மன் அழித்து அகிலத்தை காத்ததால், இவ்வூருக்கு ‘அம்பரகரம்’ என்று பெயர் வந்தது. பின்னர் ‘அம்பகரம்’ என்றாகி, தற்போது ‘அம்பகரத்தூர்’ என்று அழைக்கப்படுகிறது.
மதலோலை என்ற பெண்ணுக்கு துருவாச மாமுனியின் சாபத்தால் அம்பரன், அம்பன் என்ற 2 அசுரக் குழந்தைகள் பிறந்தன. இவ்விருவரும் அசுர குருவான சுக்கிரனிடம் கல்வி பயின்று, இறைவனிடம் வேண்டி எல்லையற்ற ஆற்றலைப் பெற்றனர். பின்னர் தேவர்களுக்கும், நன்மக்களுக்கும் பெருந்துயர் இழைத்து வந்தனர்.
What's Your Reaction?