அமெரிக்காவுக்கான இந்திய பொருட்கள் ஏற்றுமதி 7 மடங்கு அதிகரிப்பு

அமெரிக்கா​வுக்​கான இந்​திய பொருட்​களின் ஏற்​றுமதி 7 மடங்கு வரை அதி​கரித்து வரு​கிறது. உலகம் முழு​வதும் சுமார்  100-க்​கும் மேற்​பட்ட நாடு​களுக்​கான புதிய வரி விகிதங்​களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்​ளார்.

Aug 20, 2025 - 08:55
 0  4
அமெரிக்காவுக்கான இந்திய பொருட்கள் ஏற்றுமதி 7 மடங்கு அதிகரிப்பு

புதுடெல்லி: அமெரிக்கா​வுக்​கான இந்​திய பொருட்​களின் ஏற்​றுமதி 7 மடங்கு வரை அதி​கரித்து வரு​கிறது. உலகம் முழு​வதும் சுமார் 100-க்​கும் மேற்​பட்ட நாடு​களுக்​கான புதிய வரி விகிதங்​களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். இதன்​படி இந்​திய பொருட்​களுக்கு 50 சதவீத வரி விதிக்​கப்​பட்டு உள்​ளது. முதல் ​கட்​ட​மாக 25 சதவீத வரி விதிப்பு கடந்த 7-ம் தேதி அமலுக்கு வந்​தது.

மேலும் 25 சதவீத வரி விதிப்பு வரும் 27-ம் தேதி அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு அறி​வித்​துள்​ளது. ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் இந்​திய பொருட்​களுக்கு கூடு​தலாக 25 சதவீத வரி விதிக்​கப்​படு​கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்​கம் அளித்​துள்​ளார். இந்த சூழலில் அமெரிக்​கா​வின் கூடு​தல் வரி விதிப்பு அமலுக்கு வரு​வதற்கு முன்​பாக அந்த நாட்​டுக்கு அனுப்​பப்​படும் இந்​திய பொருட்​களின் அளவு சுமார் 7 மடங்கு வரை அதி​கரித்து வரு​கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow