அமெரிக்காவின் பிலடெல்பியாவில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் உயிரிழப்பு, 8 பேர் காயம்!
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிலடெல்பியாவிலுள்ள புகழ்பெற்ற ஃபேர்மவுண்ட் பூங்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

பிலடெல்பியா: அமெரிக்காவின் பிலடெல்பியாவிலுள்ள புகழ்பெற்ற ஃபேர்மவுண்ட் பூங்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம், லெமன் ஹில்ஸில் இரவு 10.30 மணிக்கு நடந்துள்ளது. அந்தநேரத்தில் ஏராளமானோர் பூங்காவில் கூடியிருந்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ஒரு கார் வந்து நின்றதைத் தொடர்ந்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்போது ஏற்பட்ட குழப்பத்தில், கார் மோதி ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
What's Your Reaction?