அமெரிக்கா - சீனா வரி தொடர்பான பேச்சு தடைபட்ட நிலையில் ஜி ஜின்பிங், ட்ரம்ப் தொலைபேசியில் ஆலோசனை
அமெரிக்கா - சீனா இடையே வரி தொடர்பான பேச்சு தடைபட்டிருந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தொலை பேசியில் பேசினார்.

வாஷிங்டன்: அமெரிக்கா - சீனா இடையே வரி தொடர்பான பேச்சு தடைபட்டிருந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தொலை பேசியில் பேசினார்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றபின், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் வரிவிதிப்பில் நியாயமாக இல்லை என குற்றம்சாட்டினார். அமெரிக்க பொருட்களுக்கு பல நாடுகள் அதிக வரி விதிப்பதாக குற்றம் சாட்டிய அதிபர் ட்ரம்ப் பரஸ்பர வரி விதிக்கப்போவதாக கூறினார். சீனப் பொருட்களுக்கான வரியை அவர் 145 சதவீதமாக உயர்த்தினார். இதனால் சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக உயர்த்தியது.
What's Your Reaction?