“அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ் மொழியை துடிப்பாக வைத்திருங்கள்” - சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம்
அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ் மொழியை துடிப்பாக வைத்திருக்குமாறு அடுத்த தலைமுறையினருக்கு சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிங்கப்பூர்: அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ் மொழியை துடிப்பாக வைத்திருக்குமாறு அடுத்த தலைமுறையினருக்கு சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தமிழ் மொழி (NUS TLS) சங்கம் தனது 50-வது ஆண்டு விழாவை கடந்த 17ம் தேதி கொண்டாடியது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தமிழ் மொழி சங்கத்தின் முன்னாள் மாணவரான சிங்கப்பூர் சட்ட அமைச்சர், மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், "கடந்த 50 ஆண்டுகளாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தமிழ் மொழி சங்கம் அளித்துள்ள பங்களிப்புகள் பாராட்டுக்குரியவை. 50 ஆண்டு கால மொழி வளர்ச்சி, மாணவர் தலைமைத்துவம், கலாச்சாரம் ஆகியவற்றை இச்சங்கம் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.
What's Your Reaction?