பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் வழங்கியது ஏன்? - சர்வதேச நாணய நிதியம் விளக்கம்

இந்தியாவின் ஆட்சேபனைகளையும் மீறி, பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் வழங்கியதை சர்வதேச நாணய நிதியம் (IMF) நியாயப்படுத்தியுள்ளது. இந்த கடன் தவணையைப் பெறுவதற்கு தேவையான அனைத்து இலக்குகளையும் பாகிஸ்தான் அடைந்துள்ளது என ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

May 23, 2025 - 18:25
 0  3
பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் வழங்கியது ஏன்? - சர்வதேச நாணய நிதியம் விளக்கம்

புதுடெல்லி: இந்தியாவின் ஆட்சேபனைகளையும் மீறி, பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் வழங்கியதை சர்வதேச நாணய நிதியம் (IMF) நியாயப்படுத்தியுள்ளது. இந்த கடன் தவணையைப் பெறுவதற்கு தேவையான அனைத்து இலக்குகளையும் பாகிஸ்தான் அடைந்துள்ளது என ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐஎம்எப்-ன் தகவல் தொடர்புத் துறை இயக்குநர் ஜூலி கோசாக், "பாகிஸ்தான் உண்மையில் அனைத்து இலக்குகளையும் அடைந்துவிட்டதாக எங்கள் வாரியம் கண்டறிந்துள்ளது. அது சில சீர்திருத்தங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது, அதனால்தான், வாரியம் முன்னோக்கிச் சென்று நிதி வழங்கும் திட்டத்தை அங்கீகரித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow