‘ஃபைனலுக்கு மும்பை வந்தால் ஆர்சிபி கோப்பை கனவு அவ்வளவுதான்!’ - அஸ்வின் வார்னிங்
நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டுமென்றால் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ள கூடாது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான அஸ்வின் கூறியுள்ளார்.

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டுமென்றால் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ள கூடாது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான அஸ்வின் கூறியுள்ளார்.
குவாலிபையர்-1 ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆர்சிபி. எலிமினேட்டரில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெறுகின்ற அணி குவாலிபையர்-2 ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி உடன் விளையாட வேண்டும். அதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
What's Your Reaction?