அமெரிக்காவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நேர்மறையாக நடைபெற்று வருவதாகவும், இருதரப்புக்கும் பயனளிக்கும் வகையிலான ஒரு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருப்பதாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக துணைத் தலைவர் சக்திவேல் கூறியுள்ளார்.

இதிருப்பூர்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நேர்மறையாக நடைபெற்று வருவதாகவும், இருதரப்புக்கும் பயனளிக்கும் வகையிலான ஒரு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருப்பதாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக துணைத் தலைவர் சக்திவேல் கூறியுள்ளார்.
தொழில் வளர்ச்சி மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏஇபிசி) துணைத் தலைவர் ஏ.சக்திவேல், டெல்லியில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை இன்று (மே 30) சந்தித்தார். தொடர்ந்து ஆயத்த ஆடை துறையின் தற்போதைய நிலை, எதிர்கால வாய்ப்புகள் மற்றும் சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது பேசினர். இதில் தொழில்துறையின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அமைச்சரிடம் ஏ.சக்திவேல் தெரிவித்தார்.
What's Your Reaction?