85 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி - அரிச்சந்திரன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
85 ஆண்டுகளுக்குப் பின்னர் அரிச்சந்திரன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் நடந்தது.

புதுச்சேரி: 85 ஆண்டுகளுக்குப் பின்னர் அரிச்சந்திரன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் நடந்தது. புதுவை கருவடிகுப்பத்தில் உள்ள சுடுகாட்டில் அரிச்சந்திர மகாராஜா கோயில் உள்ளது. இந்த கோயிலில், 1800-ம் ஆண்டில் முதல் முறையாக கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு, 1940-ம் ஆண்டு 2-வது கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு கும்பாபிஷேகம் நடக்கவில்லை. இந்த நிலையில், 85 ஆண்டுகளுக்குப் பிறகு, கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோயிலில் உள்ள வசிஷ்ட மகரிஷி, விஸ்வாமித்ரா மகரிஷி, மகாகால ருத்ர பைரவர், சந்திரமதி உடனுறை அரிச்சந்திர சுவாமிகளுக்கு இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. புதுச்சேரி ஒருங்கிணைந்த சிவனடியார் பக்தர்கள் திருக்கூட்டத்தினர் ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழ் வழியில் இந்நிகழ்வு நடந்தது. கைலாய இசைக்குழுவின் இசை நிகழ்வுகளும் நடந்தது.
What's Your Reaction?