கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடக்கம்: நவ.12-ல் தேரோட்டம்
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் நவ.12-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

கோவில்பட்டி: கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் நவ.12-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழாவுக்கான கால் நாட்டு விழா கடந்த 27-ம் தேதி நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு கோயிலில் அங்குரார்ப்பணம் நடந்தது.
What's Your Reaction?