70 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு நேர்ந்த கொடூரம் - பகிரங்க மன்னிப்பு கோரிய நியூசிலாந்து பிரதமர்!

சிறுவர்களுக்கான அரசு பராமரிப்பு இல்லங்கள், மனநல மருத்துவமனைகள் உள்ளிட்ட காப்பகங்களில் கடந்த 70 ஆண்டுகளாக சுமார் 2 லட்சம் பேருக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரங்களுக்காக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நாடாளுமன்றத்தில் பகிரங்கமான, வரலாற்றுபூர்வமான மன்னிப்பு கோரினார்.

Nov 12, 2024 - 18:20
 0  4
70 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு நேர்ந்த கொடூரம் - பகிரங்க மன்னிப்பு கோரிய நியூசிலாந்து பிரதமர்!

வெலிங்டன்: சிறுவர்களுக்கான அரசு பராமரிப்பு இல்லங்கள், மனநல மருத்துவமனைகள் உள்ளிட்ட காப்பகங்களில் கடந்த 70 ஆண்டுகளாக சுமார் 2 லட்சம் பேருக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரங்களுக்காக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நாடாளுமன்றத்தில் பகிரங்கமான, வரலாற்றுபூர்வமான மன்னிப்பு கோரினார்.

நியூசிலாந்தில் சிறுவர்களுக்கான அரசு பராமரிப்பு இல்லங்களில் ஏராளமான சிறுவர்கள் துன்புறுத்தப்பட்டதாகவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், தேவாலயங்களில் இளைஞர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், தாய்மார்களிடம் இருந்து குழந்தைகள் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டு தத்து கொடுக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow