கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவில் சில்லரை பணவீக்கம் 6.21% ஆக அதிகரிப்பு

இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் 5.49 சதவீதமாக இருந்த சில்லரை பணவீக்கம், அக்டோபர் மாதத்தில் 6.21 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லரை பணவீக்கம் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. குறிப்பாக, உணவு பொருட்களின் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

Nov 12, 2024 - 18:30
 0  4
கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவில் சில்லரை பணவீக்கம் 6.21% ஆக அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் 5.49 சதவீதமாக இருந்த சில்லரை பணவீக்கம், அக்டோபர் மாதத்தில் 6.21 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லரை பணவீக்கம் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. குறிப்பாக, உணவு பொருட்களின் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

ஒப்பீட்டளவில் சில்லரை பணவீக்கம் 2024 ஆகஸ்ட் மாதத்தில் 3.65 சதவீதமாகவும், ஜூலை மாதத்தில் 3.54 சதவீதமாகவும் இருந்தது. அக்டோபர் மாதத்தில் இந்த சில்லரை பணவீக்க உயர்வு, இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) 6 சதவீதம் என்ற மதிப்பீட்டின் அளவை விட அதிகரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow