ஈரான் அணுசக்தி மையங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லையா? - சர்ச்சையும்; ட்ரம்ப்பின் எதிர்வினையும்!
ஈரானின் அணுசக்தி மையங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்ற செய்திகள் வெளியான நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதனை முழுமையாக மறுத்துள்ளார். மேலும், ஈரான் அணுசக்தி மையங்கள் 'முற்றிலுமாக அழிக்கப்பட்டன' என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

வாஷிங்டன்: ஈரானின் அணுசக்தி மையங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்ற செய்திகள் வெளியான நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதனை முழுமையாக மறுத்துள்ளார். மேலும், ஈரான் அணுசக்தி மையங்கள் 'முற்றிலுமாக அழிக்கப்பட்டன' என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஈரான் அணுசக்தி மையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு சில மாதங்கள் மட்டுமே பின்னடைவை ஏற்படுத்தியதாகவும், அவை முற்றிலுமாக அழிக்கப்படவில்லை எனவும் உளவுத்துறை கண்டறிந்ததாக வெளியான ஊடக செய்திகளை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
What's Your Reaction?