50% வரியால் இந்திய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல்

‘‘வர்த்தக வரியை 50 சதவீதம் விதித்​த​தால், இந்​தியா - அமெரிக்கா இடையி​லான உறவில் விரிசல் ஏற்​பட்​டு​விட்​டது’’ என்று அதிபர் ட்ரம்ப் ஒப்​புக் கொண்​டுள்​ளார்.

Sep 14, 2025 - 08:25
 0  13
50% வரியால் இந்திய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல்

வாஷிங்டன்: ‘‘வர்த்தக வரியை 50 சதவீதம் விதித்​த​தால், இந்​தியா - அமெரிக்கா இடையி​லான உறவில் விரிசல் ஏற்​பட்​டு​விட்​டது’’ என்று அதிபர் ட்ரம்ப் ஒப்​புக் கொண்​டுள்​ளார்.

இதுகுறித்து கடந்த வெள்​ளிக்​கிழமை ‘ஃபாக்ஸ் நியூஸ்’ ஊடகத்​துக்கு அளித்த பேட்​டி​யில் ட்ரம்ப் கூறிய​தாவது: இந்​தியா மீது 50 சதவீத வரி விதித்​தது மிகப் பெரிய விஷ​யம். அதனால் இரு நாடு​களுக்கு இடை​யில் பிளவு ஏற்​பட்​டு​விட்​டது உண்​மை​தான். ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தில் மிகப்​பெரிய வாடிக்​கை​யாள​ராக இந்​தியா உள்​ளது. ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா நிறைய கச்சா எண்​ணெய் வாங்​கு​கிறது. அதனால் 50 சதவீத வரி விதித்​தேன். அப்​படி செய்​வது சாதாரண விஷயமல்​ல.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow