5 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க பணவியல் கொள்கை குழு (எம்பிசி) ஒருமனதாக முடிவெடுத்துள்ளது

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க பணவியல் கொள்கை குழு (எம்பிசி) ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா நேற்று கூறியதாவது: கரோனா பேரிடரின் மோசமான பொருளாதார தாக்கத்தை எதிர்கொள்ள கடைசியாக கடந்த 2020-ம் ஆண்டு வட்டி குறைப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க எம்பிசி குழு ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. அதன்படி, இந்த வட்டி விகிதம் 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?