3-வது டி20 போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி: திலக் வர்மா, அர்ஷ்தீப் சிங் அபாரம்
தென் ஆப்பிரிக்கா அணியுடனான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. இதில் இந்திய அணியின் திலக் வர்மா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

செஞ்சூரியன்: தென் ஆப்பிரிக்கா அணியுடனான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. இதில் இந்திய அணியின் திலக் வர்மா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசியது.
What's Your Reaction?