3-வது டி20 ஆட்டத்தில் தோல்வி ஏன்? - கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம்

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Jan 30, 2025 - 08:05
 0  5
3-வது டி20 ஆட்டத்தில் தோல்வி ஏன்? - கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம்

ராஜ்கோட்: இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 172 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணியால் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நடுவரிசையில் ஹர்திக் பாண்டியா 35 பந்துகளில், 40 ரன்களும், அக்சர் படேல் 16 பந்துகளில், 15 ரன்களும் சேர்த்தனர்.

இதில் ஹர்திக் பாண்டியா மந்த கதியில் ரன்கள் சேர்த்ததே தோல்விக்கான காரணங்களில் முக்கியமானதாக அமைந்தது. ஒரு கடத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 64 ரன்கள் தேவையாக இருந்தது. ஆனால் ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் ஜோடியிடம் இருந்து பெரிய அளவிலான ஷாட்கள் வெளிப்படவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow