“நான் அப்படித்தான் விளையாடுவேன்” -  ஆஸி., லெஜண்டுக்கு ஃபிரேசர் மெக்கர்க் பதிலடி

பாகிஸ்தானுக்கு எதிராக நடந்து வரும் ஒருநாள் தொடர் 1-1 என்று சமன் ஆன நிலையில், ஆஸ்திரேலிய பேட்டர்கள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களிடம் திணறி வருகின்றனர்.

Nov 11, 2024 - 16:12
 0  5
“நான் அப்படித்தான் விளையாடுவேன்” -  ஆஸி., லெஜண்டுக்கு ஃபிரேசர் மெக்கர்க் பதிலடி

பாகிஸ்தானுக்கு எதிராக நடந்து வரும் ஒருநாள் தொடர் 1-1 என்று சமன் ஆன நிலையில், ஆஸ்திரேலிய பேட்டர்கள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களிடம் திணறினர். தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட், ஐபிஎல் டெல்லி கேப்பிடல்ஸ் அதிரடி புகழ் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் ஆகியோர் ஆடும் ஆட்டத்தை ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் இயன் ஹீலி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மெல்போர்னில் ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டியை நூலிழையில் வென்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சில் சிக்கி 164 ரன்களுக்கு மடிய, மீண்டும் இலக்கை விரட்டிய பாகிஸ்தான் சயீம் அயூப் அதிரடியில் அப்துல்லா ஷபிக் இட்ட அடித்தளத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி செம அடி கொடுத்தது. இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் மேட் ஷார்ட், பிரேசர் மெக்கர்க் சொதப்பினர். இவர்களது பேட்டிங்கை தளர்வான, ஈகோத்தனமான பேட்டிங் என்றும், சூழ்நிலை மரபான அணுகுமுறையைக் கோரும்போது இப்படியா சிறுபிள்ளைத்தனமாக ஆடுவது என்று இயன் ஹீலி கடும் விமர்சனம் செய்துள்ளார். நடைமுறை அறிவுடன் ஆட வேண்டும், கற்பனாவாத அதிரடி ஆட்டமெல்லாம் எல்லா சூழ்நிலையிலும் சாத்தியமில்லை என்ற புத்தி வேண்டும் என்று இயன் ஹீலி கடுமையாகச் சாடியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow