சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்: முதலிடத்துக்கு முன்னேறினார் அர்ஜுன் எரிகைசி

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 4-வது நாளான நேற்று 4-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன.

Nov 11, 2024 - 16:12
 0  5
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்: முதலிடத்துக்கு முன்னேறினார் அர்ஜுன் எரிகைசி

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 4-வது நாளான நேற்று 4-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன.

இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் முதல் போர்டில் ஈரானின் அமீன் தபதாபேயியுடன் பலப்பரீட்சை நடத்தினார் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி. கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன் எரிகைசி 52-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர், முழுமையாக ஒரு புள்ளியை பெற்றதுடன், அமீன் தபதாபேயியை (2.5) கீழே இறக்கி பட்டியலில் 3.5 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow