2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா உருவாக தனிநபர் வருமானம் 8 மடங்கு உயர வேண்டும்: ஜெகதீப் தன்கர்
2047-ஆம் ஆண்டில் 'வளர்ச்சியடைந்த பாரதம்' ஆக இருப்பதே நமது நோக்கம், இதற்கு நமது எல்லைகளில் அமைதி அவசியம். அதோடு, இதற்கு தனிநபர் வருமானம் எட்டு மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

மர்மகோவா: 2047-ஆம் ஆண்டில் 'வளர்ச்சியடைந்த பாரதம்' ஆக இருப்பதே நமது நோக்கம், இதற்கு நமது எல்லைகளில் அமைதி அவசியம். அதோடு, இதற்கு தனிநபர் வருமானம் எட்டு மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
கோவாவின் மர்மகோவா துறைமுகத்தில் இன்று 3 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம், இரண்டு துறைமுக மொபைல் கிரேன்களின் வணிக செயல்பாடு மற்றும் நிலக்கரி கையாளுதலுக்கான மூடப்பட்ட குவிமாடம் ஆகியவற்றைத் திறந்து வைத்து அர்ப்பணித்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பின்னர் தனது உரையை நிகழ்த்தினார். அப்போது அவர், “2047-ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தேசமாக இருப்பதே நமது நோக்கமாகும். இதற்கு தனிநபர் வருமானத்தில் எட்டு மடங்கு அதிகரிப்பு தேவைப்படுகிறது. இதற்கு நமது எல்லைகளில் அமைதி நிலவுவது அவசியமாகும். போர் போன்ற சூழ்நிலைகள் இருந்தால் பொருளாதார வளர்ச்சி ஏற்படாது. வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு அமைதி அடிப்படையாகும்.
What's Your Reaction?