ரூ.3,000-க்கு பாஸ்டேக் வருடாந்திர பாஸ்: சிறப்பு அம்சம் என்ன?

வரும் ஆகஸ்ட் 15 முதல் ரூ.3 ஆயிரத்துக்கு பாஸ்டேக் வருடாந்திர பாஸ் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Jun 19, 2025 - 08:50
 0  3
ரூ.3,000-க்கு பாஸ்டேக் வருடாந்திர பாஸ்: சிறப்பு அம்சம் என்ன?

புதுடெல்லி: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற மற்றும் செலவு குறைவான பயணத்தை மேற்கொள்ள ஏதுவாக, ரூ.3 ஆயிரத்துக்கு பாஸ்டேக் அடிப்படையிலான வருடாந்திர பாஸ் அறிமுகம் செய்யப்படும். இது வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். தனிநபர் வாகனங்களுக்கு மட்டுமே இந்த பாஸ் வழங்கப்படும். வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு ஆண்டு அல்லது 200 முறை இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow