தங்கம் விலை இன்றும் குறைந்தது: பவுனுக்கு ரூ.960 சரிவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

தங்கம் விலை இந்த வாரத்தில் இரண்டாவது நாளாக இன்றும் (நவ.26) குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.960 சரிந்துள்ளது.

Nov 26, 2024 - 11:30
 0  8
தங்கம் விலை இன்றும் குறைந்தது: பவுனுக்கு ரூ.960 சரிவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை இந்த வாரத்தில் இரண்டாவது நாளாக இன்றும் (நவ.26) குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.960 சரிந்துள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை கடுமையான உயர்வைக் கண்டது. கடந்த சனிக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,300-க்கும், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.58,400-க்கும் விற்பனையானது. கடந்த ஒரே வாரத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,920 அதிகரித்து அதிர்ச்சியைக் கடத்தியிருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow