வரலாறு காணாத மக்கள் ஆதரவுடன் குடியரசு கட்சி அமோக வெற்றி: அமெரிக்க அதிபர் ஆகிறார் ட்ரம்ப்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் 2-வது முறையாக அவர் அதிபராக பதவியேற்க உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. ஜனநாயக கட்சியின் இப்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைய உள்ளது. இதையடுத்து, நவம்பர் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் (60), குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் (78) போட்டியிட்டனர்.
What's Your Reaction?