ட்ரம்ப் ரிட்டர்ன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றிப் பின்புலமும், தாக்கமும் - ஒரு பார்வை
அமெரிக்க நாட்டின் 47-வது அதிபர் யார் என்பதை உறுதி செய்யும் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘வெற்றி முழக்கம்’ எழுப்பியிருக்கிறார் முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப். இந்தத் தேர்தலில் 270 என்ற இலக்கு எளிதில் வசமாகிவிட்டது வரலாற்று வெற்றியாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவரது வெற்றியின் பின்புலமும், ‘ட்ரம்ப் ரிட்டர்ன்’ ஏற்படுத்தப்போகும் சாத்தியமான தாக்கமும் குறித்த விரைவுப் பார்வை இங்கே...
எண்கள் சொல்வது என்ன? - அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் பெரும்பாலானவை ட்ரம்ப் வசமாகியிருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘எலக்டோரல் காலேஜ்’ (வாக்காளர் குழு) நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த நாட்டில் மொத்தமுள்ள 50 மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப ‘வாக்காளர் குழு’ உறுப்பினர்கள் இருப்பார்கள். சிறிய மாகாணங்களில் ஒன்று முதல் பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் 55 வரை வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்களில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும். அந்த வகையில், இந்திய நேரம் மாலை 6 மணி நிலவரப்படி ட்ரம்ப் 279, கமலா ஹாரிஸ் 223 என்ற எண்ணிக்கையை வசப்படுத்தினர். அப்போது, ட்ரம்ப் 51 சதவீத வாக்குகளையும், கமலா 47.3% வாக்குகளையும் கைப்பற்றியிருந்தனர்.
What's Your Reaction?