மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெறும் போப் பிரான்சிஸ் பதவி விலகுவாரா? - வாடிகன் விளக்கம்

போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், அவரின் உடல் நிலையில், தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் பதவி விலகுவாரா என்ற கேள்வியும் எழுத் தொடங்கியுள்ளது. 

Feb 21, 2025 - 19:10
 0  5
மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெறும் போப் பிரான்சிஸ் பதவி விலகுவாரா? - வாடிகன் விளக்கம்

வாடிகன்: போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், அவரின் உடல் நிலையில், தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில், அவர் பதவி விலகுவாரா என்ற கேள்வியும் எழுத் தொடங்கியுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88 வயது), உடல் நலக்குறைவு காரணமாக 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow