யார் இந்த வேடன்?
கடந்த ஏப்ரலில் கேரள அரசு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் பாடிய பாடலில் சாதியக் கருத்துகளையும் பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்துகளையும் முன்வைத்ததாகச் சர்ச்சை எழுந்தது. இ

கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ மலையாளப் படத்தில் இடம்பெற்ற ‘குதந்திரம்..’ எனும் பாடல் கேரளத்தைத் தாண்டி உலகெங்கும் வைரலானது. இந்தப் பாடல் வரிகளை எழுதிப் பாடியவர் ராப் பாடகர், வேடன். சாதி, மத, நிற வேறுபாடுகளுக்கு எதிராகவும் சமூக நீதி கருத்துகளையும் தன் பாடல் வரிகளில் குறிப்பிட்டுப் பாடிவரும் வேடன், அண்மைக் காலமாகச் சமூக ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளார்.
‘வேடன்’ ஏன்? - வேடன் என்று அறியப்படும் ஹிரன்தாஸ் முரளி, கேரளத்தின் திருச்சூரைச் சேர்ந்தவர். ஈழத் தாய்க்கும் கேரளத் தந்தைக்கும் பிறந்த இவர், திருச்சூரில் ‘ஸ்வர்ணபூமி’ எனும் பிற்படுத்தப்பட்டோர் அதிகமாக வாழும் பகுதியில் வளர்ந்தார். ராப் இசைக் கலைஞராகத் தனது பயணத்தைத் தொடங்கும்போது ‘வேடன்’ எனும் புனைப்பெயரை சூட்டிக்கொண்டார்.
What's Your Reaction?