மேஷம் ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2025

மேஷம் ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்களும் பரிகாரமும்: 2025

Apr 25, 2025 - 15:15
 0  6
மேஷம் ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2025

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - 26.04.2025 அன்று ராகு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26.04.2025 அன்று கேது பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: மேஷ ராசி அன்பர்களே! இந்த பெயர்ச்சியில் நீங்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகக் காண்பீர்கள். தெய்வ வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். தள்ளி வைத்திருந்த காரியங்களைச் செய்யத் தொடங்குவீர்கள். பெற்றோருடன் இணக்கமான உறவு உண்டாகத் தொடங்கும். உங்களுடைய தெளிவான எண்ணங்களால் குடும்பத்தில் உங்களின் மதிப்பு மரியாதை உயரும். பெரியோர்களின் தொடர்பு உண்டாகி உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். நெடுநாளாக உங்களை வாட்டி வதைத்த உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். வெளியூர்–வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் உங்களை வந்தடையும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow