பெசன்ட் நகரில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்: அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர் பவனி கோலாகலம்
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில், மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் 10 நாட்கள் பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

சென்னை: பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் தேர் பவனி கோலாகலமாக நடைபெற்றது. சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில், மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் 10 நாட்கள் பெருவிழா நடைபெறுவது வழக்கம். 53-வது ஆண்டு பெருவிழா, கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து பக்த சபைகள் விழா, நற்கருணை பெருவிழா, தேவ அழைத்தல் விழா, உழைப்பாளர்கள் விழா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழா, ஆசிரியர்கள் விழா, குடும்ப விழா, அன்னையின் பிறப்பு பெருவிழா என ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகளும், ஜெப வழிபாடுகளும் காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது.
What's Your Reaction?