தமிழகத்தில் ‘மலைக்க’ வைக்கும் மலையேற்ற கட்டணம்!

தமிழகத்தில் மலையேற்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள அதிகபட்ச கட்டணத்தை குறைப்பதோடு, மலைப்பகுதிகளில் மலையேற்றம் செல்வோரின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Nov 11, 2024 - 15:59
 0  4
தமிழகத்தில் ‘மலைக்க’ வைக்கும் மலையேற்ற கட்டணம்!

கோவை: தமிழகத்தில் மலையேற்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள அதிகபட்ச கட்டணத்தை குறைப்பதோடு, மலைப்பகுதிகளில் மலையேற்றம் செல்வோரின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் 2018-ல் குரங்கணி மலையில் காட்டுத் தீயில் சிக்கி மலையேற்றம் சென்றவர்கள், பொதுமக்கள் என 23 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, மலையேற்றத்துக்கு வனத்துறை தடை விதித்தது. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு இயற்கை பற்றிய புரிதலை ஏற்படுத்த மலையேற்றத்துக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக வனப்பகுதிகளில் உள்ள மலையேற்ற வழித்தடங்களுக்கான வரைபடப் புத்தகங்கள் உருவாக்கப்படுவதுடன், அத்தடங்களின் அடிப்படை வசதிகள் ரூ.4 கோடியில் மேம்படுத்தப்படும் என அரசு அறிவித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow