ஒரே நாளில் இருமுறை கூடிய தங்கம் விலை: நிலவரம் என்ன?

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.95,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Nov 13, 2025 - 16:20
 0  13
ஒரே நாளில் இருமுறை கூடிய தங்கம் விலை: நிலவரம் என்ன?

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.13) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.95,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்​கம் விலை ஏற்ற இறக்​க​மாக இருந்து வந்த நிலை​யில், கடந்த 8-ம் தேதி​யில் இருந்து தங்​கத்​தின் விலை உயர்ந்து வந்தது. இதனையொட்டி, சென்னையில் இன்று (நவ.13) காலை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது, பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.94,400க்கு விற்பனையானது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow