‘உங்கள் நாட்டில்தான் பின்லேடன் கொல்லப்பட்டார்’ - ஐ.நா பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை சாடிய இஸ்ரேல்
அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் மண்ணில் பதுங்கிருந்தபோது அமெரிக்காவால் கொல்லப்பட்டார் என்ற உண்மையை அந்த நாட்டால் மாற்ற முடியாது என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை இஸ்ரேல் குற்றம்சாட்டியது.

நியூயார்க்: அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் மண்ணில் பதுங்கியிருந்தபோது அமெரிக்காவால் கொல்லப்பட்டார் என்ற உண்மையை அந்த நாட்டால் மாற்ற முடியாது என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை இஸ்ரேல் குற்றம்சாட்டியது.
காசாவில் நடக்கும் கொடூரமான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் சிரியா, லெபனான், ஈரான், ஏமனில் மீண்டும் மீண்டும் எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்தி இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஐநா பாதுகாப்பு சபையில் நடந்த 9/11 பயங்கரவாதத் தாக்குதல்களின் 24வது ஆண்டு நினைவு நாள் கூட்டத்தில் பாகிஸ்தானின் ஐ.நா. தூதர் அசிம் இப்திகார் அகமது குற்றம் சாட்டினார்.
What's Your Reaction?