உக்ரைன் போரை நிறுத்த சீனா மீது 100% வரை வரி விதிக்க நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்

ரஷ்யா மீதான சீனாவின் பொருளாதார பிடியை பலவீனப்படுத்த, சீனா மீது 50-100% வரிகளை விதிக்க வேண்டும் என்று நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். இது உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

Sep 13, 2025 - 20:45
 0  6
உக்ரைன் போரை நிறுத்த சீனா மீது 100% வரை வரி விதிக்க நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்

வாஷிங்டன்: ரஷ்யா மீதான சீனாவின் பொருளாதார பிடியை பலவீனப்படுத்த, சீனா மீது 50 சதவீதம் முதல் 100 சதவீதவம் வரை வரிகளை விதிக்க வேண்டும் என்று நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். இது உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "போரில் வெற்றி பெறுவதற்கான நேட்டோவின் அர்ப்பணிப்பு மிகக் குறைவாக உள்ளது. நேட்டோ கூட்டமைப்பின் சில உறுப்பு நாடுகள் ரஷ்ய எண்ணெயை வாங்குவது அதிர்ச்சியூட்டுகிறது. இது உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை நிலைப்பாட்டையும், பேரம் பேசும் சக்தியையும் பெரிதும் பலவீனப்படுத்துகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow