அரக்கனும் மனிதனும் | தேன் மிட்டாய் 49
உடைந்த பாகங்களைக் கொண்டு ஒரு பொம்மையைப் போல் ஃபிராங்கன்ஸ்டைன் என்னை உருவாக்கிய போது மனித குல வரலாற்றின் மகத்தான கண்டறிதலாக நான் இருந்தேன்.

ஒரே நேரத்தில் வரமாகவும் சாபமாகவும் இருப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? எனக்குத் தெரியும். உடைந்த பாகங்களைக் கொண்டு ஒரு பொம்மையைப் போல் ஃபிராங்கன்ஸ்டைன் என்னை உருவாக்கிய போது மனித குல வரலாற்றின் மகத்தான கண்டறிதலாக நான் இருந்தேன்.
ஒரு பேனா போல், ஒரு நாற்காலி போல், ஒரு வீடு போல் உதிரி பாகங்களைக் கொண்டு ஒரு புதிய உயிரை உருவாக்க முடியும் என்பதை உலகம் முதல் முறையாகத் தெரிந்துகொண்டது என்னைக் கண்டுதான். எங்கிருந்தோ ஒரு தலை. எங்கிருந்தோ கை, கால்கள். எங்கிருந்தோ முதுகும் தோளும். எல்லாவற்றையும் இணைத்து முடித்தபோது நான் பிறந்தேன்.
What's Your Reaction?