ஹைலோ ஓபன் பாட்மிண்டன்: உன்னதி ஹூடா வெற்றி
ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் பாட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் கால் இறுதியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா வெற்றி கண்டு அரை இறுதிக்கு முன்னேறினார்.

சார்ப்ருக்கென்: ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் பாட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் கால் இறுதியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா வெற்றி கண்டு அரை இறுதிக்கு முன்னேறினார்.
ஜெர்மனியின் சார்ப்ருக்கென் நகரில் ஹைலோ ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் கால் இறுதிப் போட்டியில் உன்னதி ஹூடா 22-20, 21-13 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபே வீராங்கனை லின் சியாங் டியை வீழ்த்தினார். இதன்மூலம் அரை இறுதிச் சுற்றுக்கு அவர் முன்னேறியுள்ளார்.
What's Your Reaction?