ஹாங்காங்கில் 2-ம் உலகப் போர் காலத்து வெடிகுண்டு கண்டெடுப்பு!

இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த பெரிய வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஹாங்காங்கில் இருந்து இரவோடு இரவாக ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.   

Sep 20, 2025 - 17:50
 0  3
ஹாங்காங்கில் 2-ம் உலகப் போர் காலத்து வெடிகுண்டு கண்டெடுப்பு!

ஹாங்காங்: இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த பெரிய வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, ஹாங்காங்கில் இருந்து இரவோடு இரவாக ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.

ஹாங்காங்கில் கட்டுமானத் தளம் ஒன்றில் இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த பெரிய வெடிகுண்டின் எஞ்சிய பகுதி கண்டெடுக்கப்பட்டது. அமெரிக்காவால் தயாரிக்கப்பட்டது என கூறப்படும் நிலையில், இந்த வெடிகுண்டு கிட்டத்தட்ட ஒன்றரை மீட்டர் நீளமும் ஏறக்குறைய 450 கிலோ கிராம் எடையும் கொண்டது என்று ஹாங்காங்ஹ் காவல் துறை தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow