‘ஸ்விக்கி’ பெயரை கைவிட்ட இன்ஸ்டாமார்ட்: தனித்த பிராண்ட் ஆக உருவாக்க நடவடிக்கை!
விரைவு வர்த்தக தளமான இன்ஸ்டாமார்ட் தனது பெயரிலிருந்து அதன் தாய் நிறுவனமான ‘ஸ்விக்கி’யின் பெயரை நீக்கியுள்ளது. தனித்த பிராண்ட் அடையாளத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுடெல்லி: விரைவு வர்த்தக தளமான இன்ஸ்டாமார்ட் தனது பெயரிலிருந்து அதன் தாய் நிறுவனமான ‘ஸ்விக்கி’யின் பெயரை நீக்கியுள்ளது. தனித்த பிராண்ட் அடையாளத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிளிங்கிட்டை சொந்தமாக கொண்ட போட்டியாளரான ஜொமோட்டோ பங்குச்சந்தையில் எடேர்னல் என பெயர் மாற்றப்பட்ட சில நாட்களுக்கு பின்பு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு விநியோக வர்த்தகத்தைத் தாண்டி, விரைவு வர்த்தகம் இந்த நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க உந்துதலாக மாறியுள்ளது.
What's Your Reaction?