ஸ்ரீரங்கம் கோயில் பகுதிகளில் பூஜை பொருட்கள் விற்க உரிமம் பெற 45 நிபந்தனைகள்!
ஸ்ரீரங்கம் கோயிலின் உப கோயிலான காட்டழகிய சிங்கர் கோயில் ஆகிய இடங்களில் தேங்காய், பூ, பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை விற்பனை செய்வதற்கான டெண்டரை, ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ளது

ஸ்ரீரங்கம் கோயிலில் பூஜை பொருட்கள் விற்பனை செய்வதற்கான உரிமம் பெறுவதற்கான ஏலத்தில் பங்கேற்க 45 நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளன. இதில், முதுநிலை கோயில்களில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் வேண்டும், ஜிஎஸ்டி செலுத்தி இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளதால் ஏலதாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள தாயார் சந்நிதி மற்றும் அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் கோயிலின் உப கோயிலான காட்டழகிய சிங்கர் கோயில் ஆகிய இடங்களில் தேங்காய், பூ, பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை விற்பனை செய்வதற்கான டெண்டரை, ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ளது.
What's Your Reaction?