ஷேன் நிகாமின் ‘ஹால்’ பட சர்ச்சை: அக்.25-ல் படத்தைப் பார்க்கிறார் நீதிபதி
ஷேன் நிகாம், சாக் ஷி வைத்யா நடித்துள்ள மலையாளப் படம், ‘ஹால்’. இதை அறிமுக இயக்குநர் வீரா இயக்கியுள்ளார். இஸ்லாமிய இளைஞனுக்கும் கிறிஸ்தவ பெண்ணுக்குமான காதலைச் சொல்லும் படம் இது.

ஷேன் நிகாம், சாக் ஷி வைத்யா நடித்துள்ள மலையாளப் படம், ‘ஹால்’. இதை அறிமுக இயக்குநர் வீரா இயக்கியுள்ளார். இஸ்லாமிய இளைஞனுக்கும் கிறிஸ்தவ பெண்ணுக்குமான காதலைச் சொல்லும் படம் இது. மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மொழிகளில் செப்.12-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், படத்தில் இடம்பெறும் மட்டிறைச்சி பிரியாணி காட்சி மற்றும் 15 வசனக் காட்சிகளை நீக்க வேண்டும் என்று தணிக்கை வாரியம் கூறியது. படக்குழு மறுப்பு தெரிவித்ததால் சான்றிதழ் வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து, ‘ஹால்’ படக்குழு கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அதோடு, ‘ஹால்’ திரைப்படத்தை நீதிமன்றமோ அல்லது அவர்கள் நியமிக்கும் பிரதிநிதியோ பார்க்க வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கப்பட்டது.
What's Your Reaction?