ஷாங்காய் மாநாட்டுக்குப் பின் புதினுடன் ஒரே காரில் சென்ற பிரதமர் மோடி

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாநாட்டுக்குப் பின்னர் ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரே காரில் சென்ற நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.

Sep 1, 2025 - 13:00
 0  3
ஷாங்காய் மாநாட்டுக்குப் பின் புதினுடன் ஒரே காரில் சென்ற பிரதமர் மோடி

தியான்ஜின்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாநாட்டுக்குப் பின்னர் ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரே காரில் சென்ற நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு சீனாவின் தியாஞின் நகரில் நடந்தது. இந்த மாநாட்டைத் தொடர்ந்து ரஷ்யா - இந்தியா இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow