வேலைவாய்ப்புத் தரும் துணை மருத்துவப் படிப்புகள்
மருத்துவப் படிப்புகளைப் போலவே துணை மருத்துவப் படிப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை; வேலை தரக்கூடியவை. பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படித்திருக்க வேண்டும்.

மருத்துவப் படிப்புகளைப் போலவே துணை மருத்துவப் படிப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை; வேலை தரக்கூடியவை. பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படித்திருக்க வேண்டும். அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளுடன் கணிதம் அல்லது வேறு பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்களும் இந்தப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
பிசியோதெரபி: எலும்பு முறிவு, சதைப்பிடிப்பு, சுளுக்கு, மூட்டுவலி, நீண்ட கால உடல் உபாதைகள் போன்றவற்றுக்குச் சிகிச்சை அளித்து வலியைப் போக்குவதில் பிசியோதெரபிஸ்ட் களின் பங்கு மிகவும் முக்கியமானது. விளையாட்டுத் துறையிலும் பிசியோதெரபிஸ்ட்டு களுக்குத் தவிர்க்க முடியாத இடம் உள்ளது. பிசியோதெரபி பட்டப்படிப்பைப் படித்தவர்கள் மருத்துவமனைகளிலும் மருத்துவச் சிகிச்சை மையங்களிலும் வேலைவாய்ப்பைப் பெறலாம்.
What's Your Reaction?