வேலை கிடைக்கும் வரை 5/6/3 முறையைப் பின்பற்றுங்கள்!
பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் இருப்பவர்களில் பலரும் எதிர்பார்ப்பது வளாக நேர்காணல் (கேம்பஸ் இன்டர்வியூ). கல்லூரிப் படிப்பு நிறைவடையும் முன்பாகவே கைவசம் ஒரு பணி உள்ளது என்பதற்கான உத்தரவாதத்தைத் தரும் வாய்ப்பு அது.

பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் இருப்பவர்களில் பலரும் எதிர்பார்ப்பது வளாக நேர்காணல் (கேம்பஸ் இன்டர்வியூ). கல்லூரிப் படிப்பு நிறைவடையும் முன்பாகவே கைவசம் ஒரு பணி உள்ளது என்பதற்கான உத்தரவாதத்தைத் தரும் வாய்ப்பு அது. ஆனால், பெரும்பாலானோர் வளாக நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. படிப்பு முடிந்த பிறகு விண்ணப்பித்துத்தான் வேலைக்குச் சென்றாக வேண்டும் என்கிற நிலை.
முக்கியமான காலக்கட்டம்: இந்த இடைப்பட்ட நிலை, அதாவது கல்லூரிப் படிப்பு முடிந்து பணிக்கான வாய்ப்பு கிடைக்கும் வரையிலான காலக்கட்டம் பலருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடியது. உறுதியற்ற எதிர்காலம் என்பது அச்சத்தை ஏற்படுத்தக் கூடும். தன்னோடு ஒரே வகுப்பில் படித்தவர்களில் சிலருக்கு ஏற்கெனவே வளாக நேர்காணல் மூலமாக வேலை கிடைத்திருப்பது தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தலாம்.
What's Your Reaction?