வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை 2’ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை 2’ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “விடுதலை 2’ படக்குழுவினர் 20-ம் தேதி ஒரு நாள் மட்டும் காலை 9 மணி சிறப்புக் காட்சியை திரையிட அனுமதி கோரியுள்ளனர். அதன்படி, 20-ம் தேதி ஒரு நாள் மட்டும் காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 2 மணி வரை ஒருநாளைக்கு அதிகபட்சமாக 5 காட்சிகளை திரையிட அனுமதி அளிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?